search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம் எம்எல்ஏ"

    2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. #MadrasHC #MadrasHCdisqualifies
    சென்னை:

    கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது தி.மு.க. வேட்பாளராக டாக்டர் சரவணன்  போட்டியிட்டார். அவர் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸிடம் தோல்வி அடைந்தார்.

    ஏ. கே. போஸின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தார்.



    அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் திருப்பரங்குன்றம் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

    தன்னை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற சரவணனின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பால், தற்போது தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு நடத்தப்படும் இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadrasHC #MadrasHCdisqualifies #ThirupparangkundramMLA #MLAAKBose #TNassemblypolls #2016polls
    ஜனவரி முதல் வாரம் தமிழக சட்டசபை தொடங்க உள்ளது. கவர்னர் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறுகிறது. #TamilNaduAssembly

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டசபை கூடுவது வழக்கம். அதபோல் இப்போது ஜனவரி மாதம் முதல் வாரம் கவர்னர் உரையுடன் சட்டசபை தொடங்க உள்ளது.

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியதும் அதற்கு மறுநாளில் இருந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். அப்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். மொத்தம் 5 நாட்கள் கூட்டம் நடைபெறும். இதில் காரசார விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூட்டத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணா நிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படும். இதேபோல் திருப்பரங்குன்றம் எம்.எல். ஏ.வாக இருந்த ஏ.கே.போஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

    ராமசாமி படையாட்சியார் உருவப்படம் சட்டசபையில் திறக்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பேரவை கூட்டத் தொடரின் போது ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்படும். #TamilNaduAssembly 

    திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK #MKStalinMourns
    சென்னை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ், மாரடைப்பு காரணமாக இன்றுஅதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடல் மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சவி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.



    இந்நிலையில், ஏ.கே.போஸ் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில், ஏ.கே.போஸ் மறைவு திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு பேரிழப்பு என்றும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். #AKBoseDeath #ThiruparankundramMLA #ADMK #MKStalinMourns
    ×